நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகிறது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவின் நவநாள் வழிபாடுகளின் முதல் நாளாகிய இன்று (ஜூன்15) கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜூன் 23 ஞாயிறு மாலை நற்கருணை பெருவிழாவும் மறுநாள் புனிதரின் திருவிழா திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

தினமும் வழிபாடுகள் மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி 05:00 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளையதினம் (ஜூன்16) ஆலய பங்கின் சிறார்களுக்கான முதல் நன்மை அருட்சாதனம் வழங்கும் புனித நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article