நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 இல் சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில் 06 ஆம் நாள் நிகழ்வாக நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் மாதிரி விற்பனைச் சந்தை மற்றும் விஞ்ஞான கண்காட்சி இன்றைய நாள் (ஆகஸ்ட்09) விருந்தினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
06 ஆம் நாளாகிய இன்று (ஆகஸ்ட்09) புலம் பெயர் உறவுகள் , வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கலந்துகொண்ட பாடசாலை அதிபர்கள், ஓய்வுநிலை கல்வியாளர்கள் உள்ளூர் பிரதிநிதிகள் ஆகிய விருந்தினர்களின் இணைவுடன் இன்றைய நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றது.
இதன்போது அதிபர் , ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தேவைகள் இனங்காணப்பட்டு அவற்றினை தீர்ப்பதற்கான உறவுகளின் சம்மதமும் , உடனடித்தீர்வும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வுகளில் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் , விருந்தினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.