நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் “வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” அமர்வு – 11 நாளையதினம் (12.02.2025) புதன்கிழமை காலை 10.00 மணிக்குநிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கதை கூறல், மற்றும் மாணவர்களைநல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக்கும் வகையில் சிறப்பு வளவாளர்களாக யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் நெடுந்தீவுக்கான சமூக இலகுபடுத்துனர்கள் க. பிருந்தா, எ. சாளினி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.