நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நேற்று(நவம்பர் 9) காலை வெங்காயச் செய்கை தொடர்பான பயிற்சிநெறி நடாத்தப்பட்டது.
நெடுந்தீவின் “நல்வாழ்வு நம் கையில்” எனும் விவசாய செயற்திட்டம் நடைபெறும் விவசாய மையமான கோட்டைக்காட்டுப் பகுதியில் வெங்காய செய்கை தொடர்பான பயிற்சியினை நெடுந்தீவு ஊரும் உறவும் நிகழ்சித்திட்ட இணைப்பாளர் மு. அமுர்தமந்திரனின் இணைப்பு செயற்பாட்டில் விவசாய போதனாசிரியர் சி. கோகுலராம் அவர்களால் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விவாசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட விதை வெங்காயம் மானியமாக வழங்கப்பட்டது.
ஊரும் உறவு அமைப்பின் தலைவர், விவசாய இணைப்பாளர், மற்றும் மூத்த விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
விவசாய போதனாசிரியர் சி. கோகுலராம் அவர்கள் நெடுந்தீவின் “நல்வாழ்வு நம் கையில்” செயற்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இயற்கை விவசாயத்தினை பார்வையிட்டதுடன், சிறுதானிய செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் அதன் நுட்பங்களையும் விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.