நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 கிண்ணம் வென்றது ஈகில்எய்ட் அணி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024  போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் (ஆகஸ்ட்18) நெடுந்தீவு மகாவித்தியாலயமைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இவ் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டியில் அருள் ஜோசப்தலைமையிலான ஈகில் எய்ட் அணியினர் கரிகாலன் சேனை அணியினரை 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி வாகை சூடி 2024 கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 , தொடரின் நாயகன்விருது ஈகில் அணியின் அருள் ஜோசப்

சிறந்த கோல் காப்பாளர் போல் நியுட்டன்.

இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக  கிருசாந்த் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இப் போட்டித் தொடரில் ஈகில் எய்ட் அணி 130,000.00 பணப்பரிசினையும்பெற்றுக் கொண்டதுடன், கரிகாலன் சேனை இரண்டாம் இடம் பெற்று100,000.00 பணப் பரிசினையும் , 3 ஆம் இடம் பெற்ற வெண்புறா அணியினர்50,000.00 பணப்பரிசினை பெற்று கொண்டனர்.

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் – 2024 ஆகஸ்ட் 16 (வெள்ளி) ஆரம்பமாகி நேற்றையதினம் (ஆகஸ்ட் 18 ) இறுதிப்போட்டியுடன் நிறைவுபெற்றது.

05 உரிமையாளர்களஇன் கீழ்  05 அணிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றதை குறிப்பிடத்தக்கது.

Share this Article