நாட்டில் நிலவும் ஒழுங்கற்ற காலநிலையின் காரணமாக தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் நெடுந்தீவு மின்சார நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் பெருகி காணப்படுகின்றது.
மழை இவ்வாறு தொடர்ந்தால், வெள்ளம் மின்சார நிலையத்திற்குள் புகுந்து, நெடுந்தீவுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பிரதான மற்றும் துணை மின் மார்க்கங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சார விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகின்றது. இந்த பாதிப்புகளை மின்சார ஊழியர்கள் உடனடியாக சரிசெய்து மின்சார விநியோகத்தை மீட்டுச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மின் உற்பத்தி இயந்திரங்களுக்கான எரிபொருள் தற்போது குறைந்த அளவில் மட்டுமே கிடைப்பதால், மின்சார விநியோகம் குறைக்கப்பட்ட அளவிலேயே வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் (நவம்பர் 27) நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் தலைமையிலான குழு, மின்சார நிலையத்தின் நிலையை நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.