நெடுந்தீவில் மாணவிகளுக்கு உலக தரிசனம் நிறுவனம் (world vision) துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு உலக தரிசனம் நிறுவனம் (world vision) துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு.

நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றையதினம்(ஒக்ரோபர் 01) இடம்பெற்ற நிகழ்வில் உலக தரிசனம் நிறுவனத்தினர் கலந்து கொண்டு கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக 34 பெண்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் நிகழ்வின் போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் , கிராம அலுவலர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள்,  ஆசிரியர்கள் , பெற்றோர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this Article