வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா – 2024 எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை26) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு பிரதேச செயலர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் அவர்களும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் கலாச்சார பேரவையினரின் கலைநிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல் , கலைஞர் கௌரவிப்ப என்பன இடம்பெறுவதுடன் நெடுங்கீற்று VI மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
நெடுங்கீற்று VI மலர் வெளியீட்டுரையினை நெடுந்தீவு கலாச்சார பேரவை உப தலைவர் செ. மகேசு அவர்களும் நூல் ஆய்வுரையினை இந்து கற்கைகள் பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனேகரன் அவர்களும் ஏற்புரையினை நெடுந்தீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் அவர்களும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.