தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இறுதி நிகழ்வு நாளைமறுதினம் யாழ்ப்பாணத்தில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைஇராணுவத்தின் தலைவராக விளங்கிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை 19 ஆம் திகதி காலமானார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (ஜூலை24) பகல் 12.00 மணிமுதல் இல. 27, ராணி வீதி , நல்லூர் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் வைக்கப்பட்டு, நாளை மறுதினம் (ஜூலை 25) காலை 9.00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970 களின் நடுப்பகுதியில் இலண்டனில் உயர்கல்வியை இடைநடுவில் உதறிவிட்டு, தாயகம் திரும்பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர், பின்னர் ஆயுதப்போராட்ட வாழ்வில் இருந்து விலகி இருந்தவர்  அண்மைக் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நட்புறவாகச் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article