நெடுந்தீவில் நேற்றையதினம் யோகாசனச் செயலமர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாதவேலைத்திட்டத்திற்கு அமைவாக  மாணவர்களுக்கான யோகாசனச்  செயலமர்வுநேற்றையதினம் (ஒக். 29) நெடுந்தீவு பிரதேச செயலகத்தினரால் நெடுந்தீவுமகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக கலாசார அலுவல்கள் திணைக்களஅபிவிருத்தி உத்தியோகத்தர் த.அஜித் குமார், பாடசாலை அதிபர் ஐ.தயாபரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தரும் யோகா போதனாசிரியருமான இ.கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும்இணைந்திருந்தனர்.

செயலமர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கலாசார அலுவல்கள்திணைக்களத்தின் சான்றிதழும் இதன்போது  வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article