நெடுந்தீவில் தரம் 05 மாணவர்களுக்கு செயலமர்வு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட இவ் வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற தரம் 05 மாணவர்களுக்கான கணிதபாட செயற்பாட்டுமுறை பயிலமர்வு இன்றையதினம்  (செப்ரெம்பர் 03) நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

தீவக கல்வி வலய ஆரம்ப கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் லோ.ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், நெடுந்தீவு கோட்டப் பாடசாலைகளின் தரம் 04 ஆசிரியர்களது ஒழுங்கமைப்புடன் இடம்பெற்பெற்றுள்ளது.

இப் பயிலமர்வில் இவ் வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற 49 மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் (ஆகஸ்ட் 28) இம் மாணவர்களுக்கான சுற்றாடல் செயற்பாட்டுமுறை பயிலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article