நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தாரகைபடகு திருத்த வேலைகளின் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சேவையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தில் படகு திருத்த வேலைகள் முடிவுற்று கடலில் படகு இறக்கப்பட்டுள்ளதுடன் உட்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள் இடம்பெற்று வருகின்றதுடன் , எதிர்வரும் வாரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த வருடம் (2023) டிசம்பர் 06 ஆம் திகதி திருத்த வேலைகளைக்காக கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தீவில் இருந்து திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் வடமாகாண சபையினால் டொக்கியாட் நிறுவனத்தின் மூலம் நெடுந்தாரகை பயணிகள் படகுசுமார் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு சேவை இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.