யாழ்ப்பாணத்தில் சளியால் பாதிக்கப்பட்ட இரண்டரை மாதக் குழந்தை நிமோனியா ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.
கள்ளியங்காடு, கட்டப்பிராய், முன்றாம் கட்டையைச் சேர்ந்த ஸ்ரீபன் சபானா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
சளி காரணமாக ஆறு நாள்களுக்கு முன்னர் குழந்தை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியவில் குழந்தை மயக்கமடைந்தது. குழந்தை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது.
சளி காரணமாக நிமோனியா ஏற்பட்டமையே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.