நாமல் கைதால் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் இது தற்காலிகமே – அர்ச்சுனா எம்.பி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டமையால் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் இது தற்காலிகமானவை . எதிர்வரும் 12ஆம் தமிழின படுகொலையாளி என்று குறிப்பிடப்படும் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் கூட்ட மேடை ஏறுவேன். எதிர்காலத்தில் ரணில், சஜித் அழைப்பு விடுத்தால் அவர்களுடன் செல்வேன் என யாழ். மாவட்ட சுயேட்சை வேட்பாளர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (10/09) நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்‌ஷவின் அநுராதபுரம் அரசியல் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப்போவதாக பலர் பல கதைகளை குறிப்பிடுகிறார்கள். வடக்கு மாகாணத்தில் தலைவன் இல்லாமல் வாழும் சமூகம் தன்னை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் யாருடனும் ஒன்றிணைந்து அரசியல் செய்யலாம்.

இந்த அரசியலில் ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்யும் என்று நாங்கள் நம்பினால் அது முட்டாள்தனமானது. சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகளுடன் கதைக்க மற்றும் சில அரசியல்வாதிகளை எதிர்க்கவேண்டிய தேவைகளில் நாங்கள் இருக்கின்றோம்.

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டுள்ளமைக்காக தமிழ் மக்கள் உற்சாகமாக இருக்கின்றனர். ஆனால் அவர் 14 நாட்களில் வெளியில் வருவார் என்று எமக்குத் தெரியும். அந்த வழக்கு முடிவடையும்போது வேறு யாரோ ஜனாதிபதியாக இருப்பார். இதனால் உற்சாகமடைந்து எங்களால் அரசியல் செய்ய முடியாது.

12ஆம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் கூட்ட மேடையில் நான் ஏறுவேன். வடக்கில் இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்பதனை கூறுவதற்கு அவர்களின் மேடையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானாலோ, சஜித் பிரேமதாச ஜனாதிபதியானாலோ அவர்கள் அழைப்பு விடுத்தால் அவர்களுடன் செல்வேன். இது அரசியலாகும். எதிர்க்கட்சியில் இருக்கும் எவருக்கும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன். அவ்வாறுதான் நாமலையும் பார்க்கின்றேன். எனது மக்களுக்காகவே நான் ஒவ்வொரு மேடையில் ஏறுகின்றேன் என்றார்

Share this Article
Leave a comment