இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் இலங்கையின் பல பல்கலைக் கழகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதாரக் கொள்கை நிறுவனம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் 23 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மூன்றில் ஒருவருக்கு அதாவது 31 வீதமானோருக்கு இரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாக இருக்கின்றது என்றும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் நீரிழிலு நோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் இருவர் (38 சதவீதம்) கண்டறியப்படாதவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.