நாடு கடத்தப்பட்ட குவைத்தில் தங்கியிருந்த இலங்கைப் பணிப்பெண்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

 

குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று (ஒக்ரோபர் 27) நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் குவைத் மாநிலத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் காலை 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் வெளிநாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வருவதற்காக குவைத் மாநிலத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள், அந்நாட்டு பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

அவர்களில் 24 வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் நான்கு வீட்டுப் பணியாளர்கள் அடங்குவதாகவும், இவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வசிப்பவர்கள் ஆவர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய குழுவினருக்கு அவர்களது கிராமங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து கட்டணத்தையும் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article