தொலைபேசி சார்ஜ் செய்யும் போது உயிர்போன சோகம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இன்று (27.08) பிற்பகல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் துயரச் சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞன், வீட்டில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்த நிலையில் உறங்கியிருந்ததாகவும், மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் தொலைபேசி வெடித்ததாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்  சம்பவம் தொடர்பான முழுமையான காரணம் விசாரணைகளின் பின்னரே உறுதியாகும்.

Share this Article
Leave a comment