தையிட்டி போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் செப்டெம்பர் 9!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தையிட்டியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ  மற்றும் காணி உரிமையாளரும் போராட்டக்காரருமான ப. சாருஜன் உள்ளிட்டோருடன் பெயரிடப்பட்ட வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் உள்ளிட்ட  ஏனையோருக்கு எதிரான வழக்கு 7ம் திகதி அன்று மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் வழக்கினை முன்கொண்டு ஏதுக்கள் காணப்படுகின்றன என்ற அப்படையில் வழக்குத் தொடுநர் வழக்கினை முன்கொண்டு செல்ல முடியும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வழக்கில் குறிப்பிட்ட எதிராளிகளின் வாக்குகூலங்களை வழங்க பணிக்கப்பட்டதுடன் இவ்வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.

Share this Article
Leave a comment