தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம்
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புங்குடுதீவு மடத்துவளிப் பிரதேசத்தில் சுகாதாரபரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்டு சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைளைத் துரிதப்படுத்தியுள்ளனர் ஏற்கனவே கடந்த காலங்களில் புங்குடுதீவிற்கான போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தி பரவலைத்தடுத்தமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு நயினாதீவு நெடுந்தீவு போன்ற தீவுகங்களின் போக்குவரத்து நிலமைகளைக் கருத்திற்கொண்டு தீவகத்திற்கான போக்குவரத்தினை நிறுத்தம் செய்து அல்லது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கூடாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்
இன்றைய தினம் போக்குவரத்து சேவைகள் மடத்துவளிப்பிரதேசத்தில் கட்டுப்படுதத்ப்படுவதுடன் சில சமயங்களில் மேற்குறித்த தீவகங்களுக்கான போக்கவரத்துக்கள் நிறுத்தம் செய்யப்படலாம் எனவும் சுகாதாரப் பரிசோதகர்களால் தெரிவிக்கப்படுகின்றது.