2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களுக்கு வசதியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தபால்மூல விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, அதாவது மாவட்ட தேர்தல் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒரே மாதிரியான பெயர்கள் இருக்கும் நிலை காரணமாக, தபால்மூல விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களை வேறொருவருடன் சரிபார்த்து, தபால்மூல விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பப் படிவங்களை வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்களில், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இலவசமாகப் பெறலாம்.
தபால்மூலம் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 5 அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தபால்மூலம் விண்ணப்பிக்க இறுதி நாளான ஓகஸ்ட் 5 நள்ளிரவு 12 மணிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டும்.
அந்த தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.