தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக தலைவரொருவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக மீஹரத் ஆகியோரது பங்குபற்றலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
அதற்கமைய தனிநபர் தரவுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கான தலைவராக அர்ஜூன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதோடு, பணிப்பாளர் சபையின் உறுப்பினராக ஜனநாத் பெர்னாண்டோ, சுலக்ஷன ஜயவர்தன,சௌமியா அமரசேகர, ஹேஷான் விஜே திலக, பிசர செனவிரத்ன மற்றும் நிஷித் அபேசூரிய ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2022 ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டு நீண்ட காலம் சென்றுள்ள போதிலும், இன்னும் நடைமுறைப்ப டுத்தப்படாமலுள்ளதனால் இவ்வாறு பணிப்பாளர் சபையொன்றினை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் தனிநபர் தரவுகள் பாதுகாக்கப்படும் அதேவேளை, அந்த தரவுகளை தவறான முறையில் பரிமாற்றுபவர்களை தண்டிக்கும் அதிகாரத்தை தனிநபர் தரவு ஆணைக் குழு கொண்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினை நிறுவு தல், அலுவலகத்தை நிர்வகித்துச் செல்லல் என்பன இந்தக்குழுவால் முன்னெடுக்கப்படும்.