ஜனவரி முதல் மீண்டும் வாகன இறக்குமதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025 ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதிசெய்யப்படவுள்ளன.

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் எனதாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்  சங்கத்தினர்தெரிவித்துள்ளனர்.

மேலும், இறக்குதிக்கான பணத்தை மத்திய வங்கி ஏற்கனவேஒதுக்கியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகேதெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின்இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யஅனுமதிக்கப்படும் என்று கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி,  கார்கள், வான்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள்போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.

இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின்னர், உரிமம் பெற்றவர்கள் தங்கள்உரிமத்தின்படி வாகனங்களை இறக்குமதி செய்யலாம் எனவும் முன்னர்அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.

Share this Article