சிறப்புற நடந்த நெடுந்தீவு சென். ஜேம்ஸ் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வும், சிறுவர் தின நிகழ்வும்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு சென். ஜேம்ஸ் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வும், சிறுவர் தின நிகழ்வும் இன்றையதினம் (ஒக். 02) மாலை சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு சென். ஜேம்ஸ் முன்பள்ளியின் தலைவி திருமதி பி.டயாளினி தலைமையில் உதய சூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் திருமதி நிவேதிகா கேதீசன் கலந்து சிறப்பித்திருந்தார்.

சிறார்களின் பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. முன்பள்ளி சிறார்கள் விருந்தினர்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு பரிசிலும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் நெடுந்தீவு முன்பள்ளிகளின் இணைப்பாளர் , நெடுந்தீவு பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள்  மற்றும் சிறார்கள், பெற்றோர்கள் , ஆர்வலர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article