நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் – 2024 விளையாட்டு நிகழ்வு நேற்றையதினம் (ஜூலை04) வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
வித்தியாலய அதிபர் எஸ்.முரளிமோகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வித்தியாலய ஓய்வுநிலை அதிபர் ந. லோகேஸ்வரி கௌரவ விருந்தினராககலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.