சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை நிகழ்வு  நெடுந்தீவு மத்தி தென்னிந்தியதிருச்சபை முன்பள்ளி வளாகத்தில் இன்றையதினம் ( ஜூன்17) சிறப்புறஇடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தென்னிந்திய திருச்சபையின் ஆதீன செயலர்அருட்கலாநிதி சதீஸ் டானியல் அடிகளால் கலந்துகொண்டு நிகழ்வைஆரம்பித்துவைத்தார்.

சிறப்பு அதிதிகளாக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன்அடிகளாரும், நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரிசெல்வி அவர்களும், நெடுந்தீவு பிரதேச செயலக முன்பிள்ளை பருவஉத்தியோகத்தர் திருமதி டானியல் நிஷாந்தினி அவர்களும் முன்பள்ளிகளின்இணைப்பாளர் திருமதி வசந்த சகாயராணி அவர்களும் கலந்துகொண்டனர்.

கெளரவ விருந்தினர்களாக நெடுந்தீவு கல்விக்கோட்டத்தின் அதிபர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறார்கள் நலன்விரும்பிகள் என பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article