சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2024 இன் இறுதி போட்டி நிகழ்வு இன்றையதினம் (மே.02) பி. ப.  2.00 மணியளவில் வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் அ. பீலிக்ஸ் ஜேக்கப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி திரு. தஜிஷயன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ் விளையாட்டு விழாவில் இந்துமத குருக்கள் , நெடுந்தீவு கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள் , பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article