நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2025 இன் இறுதி போட்டி நிகழ்வு இன்றையதினம் (பெப். 18) பி. ப. 2.00 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் ச.ஞானகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலயகுரு பிரம்மஶ்ரீ சிவபாலசர்மா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் , கௌரவ விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜெ.ஜெனற்ஜான்சன், நெடுந்தீவு மங்கயற்கரசி வித்தியாலய ஓய்வுநிலை அதிபர் திருமதி லோ. நகுலசிறி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை அலங்கரித்தனர்.
இப்போட்டிநிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.