சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகாவித்தியாலய ஒளிவிழா நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வும், உயர்தர மாணவர்களுக்கான  பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வும் கடந்தவாரம் வித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொடர்ந்து இவ் வருடம் உயர்தர பரீட்சக்கு தோற்றும் மாணவரகளுக்கான ஆசீர்வாதமும், அனுமதி அட்டை வழங்கலும் இடம்பெற்றது.

ஒளிவிழா அரங்க நிகழ்வுகள் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களது  கலைநிகழ்வுகள் அரங்கினை அலங்கரித்ததுடன் இந் நிகழ்வில் வித்தியாலய அதிபர் , அயற் பாடசாலை அதிபர்கள், நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர், இந்துமத குரு, பங்குத்தந்தை, கன்னியர்மட தலைவி மற்றும் பெற்றோர், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறப்பிடத்தக்கதாகும்.

Attachment.png

Share this Article