சாமரவுக்கும், பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20/11) உத்தரவிட்டுள்ளது.

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தஸநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

 இதற்கு மேலதிகமாக, குறித்த வழக்கின் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள தினேஷ் பெரேரா என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, திறந்த  பிடியாணையை பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Share this Article
Leave a comment