இலங்கை மத்திய வங்கி தனது நாணய கொள்கை வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் உயர்த்த முடிவு செய்துள்ளது.
நேற்று (19/11) நடைபெற்ற நாணய கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, முந்தைய 8.75 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக இந்த விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.