கோப்பாயில் 3 நாள்களாக குழுச் சண்டை மறியலில் வைத்தது மன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாய் பகுதியில் 3 நாள்களாகத் தொடர்ச்சியாகக் குழுச் சண்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 பேர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியில் இரு பகுதியினருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு தரப்பும் மூன்று தினங்களாக சச்சரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளன.

ஒரு தரப்பின் மீது மற்றொரு தரப்பு கல் எறிவது, வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் கோப்பாய் பொலிஸார் நேற்று 3 பெண்கள் உட்பட 23 பேரைக் கைது செய்தனர். ஒரு குழுவைச் சேர்ந்த 12 பேரும், மற்றொரு குழுவைச் சேர்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது நீதிவான் ரி.ஆனந்தராஜா சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share this Article