மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரனுக்கு ஜனாதிபதி நியமனம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (13/03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் எஸ். சதீஸ்தரனுக்கு வழங்கினார்.

நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியாக பணியாற்றியுள்ள எஸ். சதீஸ்தரன், இதற்கு முன்பு சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக தனது கடமைகளை மேற்கொண்டிருந்தார்.

சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பதவிக்கான இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் நீண்டகாலமாக சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article