கோப்பாய் பாரதிபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தையை அடித்தக் கொலை செய்ததாக மகன் ஒருவர் பிரதான சந்தேச நபராக கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் கலாசாலைக்கு அண்மித்த பாரதிபுரம் பிரதேசத்தில இச் சம்பவத்தினால் ஐந்து பிள்ளைகளின் தந்தையான 52 வயதாக இரசமணி இரத்தின சிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (ஏப்ரல் 23) மது போதையில் சென்ற குடும்பத்தர் தகாத வார்த்தையினால் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் ஒருவர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மைத்துனரும் இணைந்து தாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்றிரவு இடம் பெற்ற இச்சம்பவத்தால் குடும்பத்தர் அசைவற்று கிடந்துள்ளார். காலையில் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், யழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் பற்றையில் மறைந்திருந்த மகன் பிறிதொரு மகன் மற்றும் மைத்துனர் மூவரையும் கைது செய்துள்ளனர்.