யாழ் கோண்டாவில் பிரதேசத்தில் வீடொன்றில் தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தொிவித்து இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கைது செய்யப்பட்டனா்
கோப்பாய் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட கோண்டாவில் உப்புமடம் பகுதியில் குறிப்பிட்ட வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம் பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்புப் பொலிஸ் பிாிவினாரால் குறிப்பிட்ட வீடு சுற்றி வளைக்கப்பட்டது.
அதன்போது கோப்பாய் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அதே போல் கொடிகாமம் பிாிவைச் சோ்ந்த பெண் ஒருவருமாக 03 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்பாய் பொலிஸ் நிலையததின் ஊடாக இன்று (டிசம்பா் 23) நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்டனா் சட்டத்திற்கு புறம்பாக நடந்தமை தொடா்பாக வழக்கை விசாாித்த நீதவான் மூவரையும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தொிவித்துள்ளாா்.