நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் குமுதினிப்படகுச் சேவையானது தற்போதைய கொரோன பாதுகாப்பு சட்ட நடைமுறைகளுக்கு அமைவாவும்;, மக்களது போக்குவரத்தினை இலகுவாக்கும் நோக்குடனும், கடந்த 23ம் திகதியில் இருந்து ஒரு நாளைக்கு 03 தடவைககள் குமுதினிப் போக்குவரத்து சேவைகள் மாற்றப்பட்டிருந்து.
அதற்கமைவாக இன்றைய தினம் காலையில் குறிகட்டுவான் துறைமுகம் வந்து மீண்டும் நெடுந்தீவு சென்றடைந்து அங்கிருந்து மீளத்திரும்பி வந்த நிலையில் குமுதினிப்படகு சிறுபழுதுக்குள்ளாகியதால், மதிய நேரம் குறிகட்டுவானில் இருந்து புறப்படவேண்டிய குமுதினிப்படகுச் சேவை இடம் பெறவில்லை
இதனால் நெடுந்தீவிற்கு சென்ற அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அனைவரும் பல.நோ.கூட்டுறவுச்சங்கத்தின் சமுத்திரா தேவா படகு மூலம் நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் சென்றடைந்தனர்
குமுதினிப்படகு தற்போது திருத்தம் செய்யப்பட்டு நெடுந்தீவிற்கு மீளத்திரும்பியுள்ளது நெடுந்தீவில் இருந்து நாளைய தினம் வழமைபோல் சேவை இடம் பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது மாலை சமுத்திர தேவா படகு மூலம் மக்கள் நெடுந்தவிற்கு சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குமதினிப்படகு எமது தீவகத்தின் போக்குவரத்து சேவையில் நீண்டவரவாற்றை கொண்டிருப்பதுடன் சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது நீண்ட பாவனை இருப்பதால் அதனை சரியான முறையில் திருத்தம் செய்து பாவனைப்படுத்தபடல் வேண்டும் மூன்று நேர சேவை என்பது குமுதினிப்படகு மிக விரைவாக பழுதடைவதற்கு வழியமைக்கும் எனவும் இதனை இரண்டு சேவைகளாக மட்டுப்படுத்தி தனியார் படகுச் சேவையினை சிறப்பென மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.