புங்குடுதீவு சூழகம் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போதைய கொரோனா வைரஸ்தாக்கத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு தீவகம் தெற்கு வேலணைப்பிரதேச செயலாளர் பகுதியில் கொரேனா தடுப்பு பகுதியில் பணியாற்றும் பணியாளர்களான கிராம சேவையாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் தரப்பினர், வேலணைப் பிரதேச செயலக ஊழியர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு முப்பந்தையாயிரம் ரூபாய் பெறுமதியான கொவிட் 19 பாதுகாப்புக்கான முகக்கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினிகள், போன்றவை நேற்றைய தினம் (நவம்பர் – 28) வழங்கி வைக்கப்பட்டன.

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தினைச் சேர்ந்த கருணாகரன் முரளிதரம் அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு இப்பொருட்களை சூழகம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார் சூழகம் நிறுவனத்தினர் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்கள் ஊடாக இப்பொருட்கள் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

Share this Article