கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன.
வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த சாரதிகளிற்கும், கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் உள்ளிட்ட 45 பேரிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் அடையாளம் காணப்பட்ட பின்னர் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினாரால் குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்