கிளிநொச்சியில் அடையாள மரதன் நிகழ்வுகள் 2024 மே 25 இல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளி மக்கள் அமைப்பு மற்றும் யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சர்வதேச சங்கம்இணைந்து ஐக்கிய இராச்சிய எடின்பரோ மரதன் நிகழ்வில்கலந்துகொள்வதினை வலுச்சேர்க்கும் வகையில் மூன்றாவது ஆண்டாக கிளிநொச்சியிலும் ஏனைய தமிழ் மாவட்டங்களிலும் அடையாள மரதன்நிகழ்வுகள் 2024 மே 25 நடைபெற உள்ளது.

கிளிநொச்சியில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும்கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  வெற்றியாளர்களுக்கு பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

சுமார் 120 பேருக்கு மேல் எடின்பரோ மரதன் விழாவில் கலந்துகொள்ளஇருப்பதுடன் *இதுவரை சுமார் 40,000 பவுன்களுக்கு மேல் (ரூபா 15 மில்லியன்களுக்கு மேல்)* நிதியினை சேகரித்துள்ளார்கள். இந்த நிதியானதுவடக்குக் கிழக்கில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும் பசுமையானதாயகத்தை உருவாக்குவதற்கும் பயன்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article