காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னாலும் அதனை அண்மியபகுதிகளிலும் பரீட்சார்த்த வாராந்த சந்தையை எதிர்வரும் ஜூலை 23 புதன்கிழமை காலை 8 மணி முதல் நடாத்தத் தீர்மானித்துள்ளதாக காரைநகர் பிரதேச சபை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்தையானது பின்வரும் பல்வேறுபட்ட பொருட்களை வாங்கவும்விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
• உள்ளூர் உற்பத்திப் பொருட்கள்
• காய்கறிகள்
• கால்நடைகள்
• கோழிகள்
• ஏனைய பொருட்கள்.
மேலும் ஆடு மற்றும் கால்நடைகளை பிரதேசத்திற்கு வெளியே கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாக வழங்குவதற்குரியஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் செய்யப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச மக்கள் மாத்திரமல்லாது, வெளிப்பிரதேச மக்களும்இச்சந்தையில் பங்குபற்றிப் பயன்பெறுமாறு பிரதேச சபை சார்பாக கௌரவதவிசாளர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் தொடர்ந்து வாராந்தம்வருகின்ற புதன்கிழமைகளில் இச்சந்தை கூடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.