காரைநகர் பிரதேச சபைப் பிரிவில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் சலுகை விலையிலான குடிநீர் விநியோக ஒழுங்கு குறித்தான அறிவிப்பை காரைநகர் அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ளது.
அதாவது திங்கட்கிழமைகளில் வரிவளவு, கல்லந்தாழ்வு,வேரம்பிட்டி,கருங்காலி,வியாவில், நீலங்காடு,பலகாடு மற்றும் துறைமுகப்பகுதி ஆகிய இடங்களுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வுள்ளது.
அதேபோல் செவ்வாய்க் கிழமைகளில் வலந்தலைச் சந்தி, மாவடி, தெருவடிப் பிள்ளையார், காளிகோயிலடி, பொன்னாவளை, களபூமி, கரப்பிட்டியந்தனை, சத்திரந்தனை மணியம் வீதி மற்றும் இடைப்பிட்டி ஆகிய பகுதிகளுக்கும் புதன்கிழமைகளில் பெரிய ஆலடி,வேம்படி, பத்தர்கேணி, மணற்காடு, பயிரிக்கூடல், சக்கலாவோடை மற்றும் குமிழங்குழி ஆகிய பகுதிகளுக்கும் வியாழக்கிழமைகளில் திக்கரை, களபூமி, வளுந்போடை,டிப்போவடி, விளானை, பாலாவோடை, ஊரி மற்றும் பிட்டியேல்லை ஆகிய பகுதிகளுக்கும் விநியோகம் இடம்பெறவுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் சின்னாலடி,செம்பாடு,தங்கோடை, அறுகம்புலம், நாகம்மாள் கோவிலடி, கள்ளித்தெரு, மருதபுரம், சல்லை, மணற்பிட் டி,ஆயிலி, முல்லைப்பிளவு மற்றும் கோவளம் ஆகிய பகுதி களுக்கும் சனிக்கிழமைகளில் புதுறேட், காமாட்சிகேணியடி, மருதடி, நீலிப்பந்தனை, மல்லி கை, சிவன்கோவிலடி, மாப்பா ணவூரி, இலகடி, சயம்பு வீதி மற்றும் பழையகண்டி ஆகிய பகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழ மைகளில் பொன்னானேன்பலம் வீதி, வெடியரசன் வீதி,விக்காவில், சிவகாமி அம்மன் கோவிலடி,இலந்தைச்சாலை,வேதரடைப்பு, அல்வின் வீதி மற்றும் சந்தம்புளியடி ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் விநிகோகம் நடைபெறவுள்ளது.
இக் குடிநீர் ஒரு லீற்றர் 1.30 சதத்திற்கு வழங்கப்படுவதாகவும் விசேடமாக குடிநீர் தேவையானோர் சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.