கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாககனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாகபதிவாகியுள்ளதோடு,  இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மே மாதம் கனேடிய பொருளாதாரத்தில் 27000 புதியவேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக தொழிற்சந்தைபலவீனமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் கனேடிய மத்திய வங்கிசிறிதளவு வட்டி வீத குறைப்பினை இரண்டு தினங்களுக்கு முன்னதாகஅறிவித்துள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் 15 முதல் 24 வயதுடைய இளம் பெண்களுக்கும், 55 வயதுமற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அதிகரித்ததாககூறப்படுகிறது.

அத்துடன், மே மாதத்தில் ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் சஸ்காட்செவன்ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this Article