இந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திரு விழாவுக்கான செலவு விவரங்கள் தொடர்பில், யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் பதில் வழங்கப்பட் டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு, கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்களத்தினால் ஒரு மில்லியன் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்ட தாக, தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நிதியில் நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபாவும், யாழ்.மாவட் டச் செயலகத்திற்கு 2 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்ட நிதியில், யாழ்.மாவட்ட செயலகத்தின் செலவு விபரங்கள் விரிவாகத் தரப்படாத நிலையில், நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் செலவு விவரங்களை, நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ளுமாறு தகவல் கோரிக்கையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாவில், ஆலய உற்சவத்திற்குத் தேவையான பொருட்கள், குடிநீர்த்தாங்கி மற்றும் தளபாடங்களை, மாவட் டச் செயலகம் மற்றும் ஊர்கா வற்றுறை,வேலணை பிரதேச செயலகங்களிலிருந்து காங்கே சன்துறைக்கு கொண்டு சென்றமை, ஆலயத் திருவிழா நிறைவு பெற்றதும், மீளவும் உரிய இடங் களுக்கு சேர்ப்பதற்கான எரிபொருட்செலவு, கச்சதீவுத் திருவிழா தொடர்பான முன்னேற்பாட் டுக் கலந்துரையாடல் செலவு உட்பட நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திற்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
குறித்த நிதியில், உணவுப்பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், எரிபொ ருள், மின்பிறப்பாக்கி, சுத்திகரிப்பு பணியாளர்களின் சம்பளம், படகுக் கட்டணம், நீர்ப்பம்பிச் செல வுகள் என்பன உள்ளடங்குவதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி நடைபெற்ற கலந் துரையாடலில், கச்சதீவுத்திரு விழாவில் அதிகளவு இந்திய பக்தர்களும் கலந்து கொள்வ தனால், இலங்கை கடற்படை யினரால் மேற்கொள்ளப்படும் செலவினங்களில் சிலவற்றை மீளளிப்புச் செய்வதாக இந்திய துணைத்தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
கடற்படையினரால் மேற் கொள்ளப்பட்ட செலவு விபரங் களின் நிதிக்கோரிக்கை விபரம், யாழ்.இந்தியத் துணைத்தூதர கத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டதாக, யாழ்.மாவட்டச் செயல கத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் தெரி
இந்த நிலையில்,இந்த வருடம் இடம்பெற்ற கச்சதீவுத் திருவிழா தொடர்பான உரிய ஒழுங்கமைப் புகள் மேற்கொள்ளப்படுவது குறித்து, திருவிழா நிறைவுற்ற மறுநாளே ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்