எழுவைதீவு பொதுநூலகத்தின் இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்புமாத இறுதி நிகழ்வும் பரிசளிப்பும் நேற்று(நவம்பர் 8) காலை கோலாகலமாக இடம்பெற்றது.
விருத்தினர்கள் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்களின் பாண்ட் வாத்திய அணியின் வரவேற்புடன் விழாமண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஊர்காவற்றுறை பிரதேச சபை செயலாளர் அ. பிரதீபன் தலைமையில் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் இ. குபேசன் கலந்து சிறப்பித்திருந்தார்.
தேசிய வாசிப்புமாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு விருந்தினர்களின் நல்வழிப்படுத்தும் சிறப்புரைகளும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. எழுவைதீவு பொது நூலகத்தினால் உருவாக்கப்பட்ட Hi-Fi எனும் குறும்படம் மற்றும் எழுவை சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
இதுவரை காலமும் இவ்விழாவானது பிரதேச சபை நூலகத்திலேயே இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை பாடசாலை மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இவ்விழாவில் எழுவைதீவில் உள்ள பாடசாலைகள் , முன்பள்ளி என்பவற்றின் மாணவர்களும் , வாசகர்கள் , மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.