நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ளது “நெடுவூர்த்திருவிழா” 2024 இல் தேவா கலாச்சார மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நிலையங்களினை விருந்தினர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்து சிறப்பாக விற்பனைகள் இடம்பெற்று வருகின்றது.
தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரைக்கும் இவ் வளாகத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் அவர்களும் கௌரவ விருந்தினராக அஞ்சல் திணைக்கள சிரேஸ்ட பிரதி அஞ்சல்மா அதிபதி ராஜித கே. ரணசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன், ஆட்பதிவுத் திணைக்கள வட மாகாண உதவி ஆணையாளர் அ. கிருபாகரன், யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ். சிவகரன் , நல்லூர் பிரதேச சபை செயலாளர் , வடமாகாண விளையாட்டு திணைக்கள் நிர்வாக உத்தியோகத்தர், நெடுந்தீவின் மதகுருக்கள், வெளி மாவட்ட மக்கள், புலம்பெயர் உறவுகள் என கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.