இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இன்றைய தினம் மருதமடு அன்னை நெடுந்தீவுக்கு இறை பயணம் செய்த திருப்பலி நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகிய வேளை படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
2019 ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்குமாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்றுஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன.
10 தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 272 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானார்கள்.