இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்தது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 19 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 1,912,233 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, நவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மாத்திரம் 49,929 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இதுவரை 512,026 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 176,670 பேரும், சீனாவிலிருந்து 126,326 பேரும், ஜெர்மனியிலிருந்து 108,754 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், நவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் இந்தியாவிலிருந்து 12,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அந்தக் காலப்பகுதியிலும் இந்தியாவே முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment