இந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதல் : 9 பேர் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்தியாவில் பக்தர்கள் சிலர் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்தியதுப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதோடு 33 பேர் காயமடைந்துள்ளனர்.

பக்தர்களுடன் ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது, பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில்கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த தாக்குதலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும்இராணுவத்தினர் பிரதேச மக்களுடன் ஒன்றிணைந்து காயமடைந்தவர்களைமீட்பு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.

Share this Article