வட மாகாணத்தில் 100 000 கண்டல் தாவரங்களை மீளுருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக பசுமை அனலையுடன் இணைந்து அனலைதீவில் முதல் கட்டமாக 200 கண்டல் தாவரங்களை Save a Life எனும் சூழல் நலன்சார் தன்னார்வ தொண்டு நிறுவன இளைஞர்களால் இன்றைய தினம் நாட்டப்பட்டது.
மண்ணரிப்பை தடுக்க இயற்கை அரணாய் இருந்து கடலரிப்பை தடுத்து பாதுகாக்கவும், பறவைககளின் சரணாலயமாக விளங்கி மீன்வளங்ளை பெருக்கும் முகமாகவும் இன்று அனலை கிழக்கு கடலோரத்தில் கண்டல் தாவரங்கள் விளங்குகின்றது.
யாழ் இளைஞர்களின் இம்முயற்சியால் சுமார் 2500 கண்டல் தாவரங்கள் குடாநாட்டைச் சூழ ஏலவே நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைந்து பசுமை அனலை மேலும் பல கண்டல் தாவரங்களை அனலைதீவைச் சூழ நாட்டிவைக்கவும் தயாராக உள்ளது.