ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிய அர்ச்சகர் யாழில் உயிரிழப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 8) நடந்துள்ளது.

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே உயிரிழந்துள்ளார்.

ஆலய பூசை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Share this Article