வெள்ளவத்தையில் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்!- பொலிஸார் தீவிர விசாரணை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று இன்று காலை (நவம்பர் 5) கரையொதுங்கியுள்ளது.

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும், இந்தநிலையிலேயே இன்று(நவம்பர் 5) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது.

சடலம் தொடர்பில் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா கிருசாந்த் என்ற 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவரின் உடலிலும் முகத்திலும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article